ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் ஜனாதிபதி மாளிகை செலவு தொடர்பாக
தினமலர் நாளிதழில் இன்று - 20-07-2015 - வந்துள்ள இந்த தலைப்பின் கீழான செய்தி கொஞ்சம் வியப்பையும் வேதனையையும், வியப்பையும் அளிக்கிறது.
ஜனாதிபதி மாளிகை குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்னரே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மன்சூர் தர்வேஸ் என்பவர் சில விபரம்
கேட்டுள்ளார். ஆனால், சமீபத்தில் தான் இதற்கான பதிலை பிரதமர் அலுவலகம்
அளித்துள்ளது. இந்த உயர்ந்த இடங்களிலேயே இவ்வாறு என்றால் மற்ற மாநில அலுவலகங்களைப் பற்றி என்ன நினைப்பது?
அதுவும் நம் தமிழ் நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் இந்த சட்டத்தின் நேரிடையான, உண்மையான் பதில்களை உரிய கால கட்டத்தில் பெறுவது என்பது மிகவும் கடினம். இவர்களுக்கு சாதகமான நிலையில் தான் மாநில தகவல் ஆணையமும் இயங்கி வருகிறது.
No comments:
Post a Comment