லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை முறை.
இன்று (15-06-2015) தின மலர் (dinamalar ) நாளிதழில் ஒரு செய்தி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் வழக்கறிஞர் வே.முருகன் என்பவர் கொடுத்த புகாரின் மீது சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலிசார், அரசு பணியில் நடந்த முறைகேடுகளின் மீது இன்று ஆய்வு செய்ததாக செய்தி வந்துள்ளது.
இதில் என்ன விஷேசம் என்றால் , நானும் இது போன்று இரண்டு புகார் மனுக்களை சென்னை லஞ்சம் மற்றும் ஓழல் ஒழிப்பு அலுவலகத்திற்கு 2012-ம் ஆண்டு அனுப்பினேன். சுமார் 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட உரிய ஆதாரங்களையும் அதனோடு இணைத்திருந்தேன்.
இவைகளையெல்லாம் சென்னை அலுவலகத்தில் விசாரிக்க முன்வர வில்லை.
ஆனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அதே 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைத்தார்கள். இந்நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பல நினைவூட்டுகள் அனுப்பினேன். பதிலும் இல்லை.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் விதிகளின்படி மனு அளித்தும் தவறான பதில்களையே அளிக்கிறார்கள். மாநில தகவல் ஆணையமும் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுத்து வழக்கை முடிக்கிறார்கள்.
எனது மனு மற்றும் இணைப்புகள் சென்னை காவல் ஆணையர்அலுவலகத்தில் உள்ளதா என்ற சந்தேகம் எழும்படியான நடவடிக்கையாகத்தான் அவர்கள் நடைமுறை உள்ளது.
Appoint new information commissioners in TN: PMK - என்ற தலைப்பில்
இன்று டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஆங்கில செய்தி பத்திரிகையில் வந்துள்ளது .
அரசு துறைகளின் நிர்வாகம் பொதுமக்களுக்கு உதவுவதற்காகத்தான் செயல்படுகிறதா என்ற சந்தேகம் அகற்றப்படும் வண்ணம் நடவடிக்கை எப்போது எடுப்பார்கள்?
No comments:
Post a Comment